Features
உங்கள் ஒவ்வொரு தொழில் தேவையையும் பூர்த்தி செய்ய, தொழில் விரிவாக்கம் மற்றும் நடப்பு மூலதனம் முதல் உங்கள் குழந்தையின் கல்வி அல்லது வீட்டு சீரமைப்பு வரை, எந்தவொரு பிணையுமின்றி (பிணை என்பது ஒருவர் கடன் பெற அவருடன் வைத்திருக்க வேண்டிய அவசியமான ஒரு ஆவணமாகும். பத்திரங்களும் பிணையமாக பயன்படுத்தப்படலாம்.)ரூ. 40 லட்சம் கடன் அல்லது செக்யூரிட்டி பெறலாம் (தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ரூ. 50 லட்சம் வரை), (உத்தரவாதம் அளிப்பவர் (ஒரு உத்தரவாதம் அளிக்கும் நபர் என்பவர் மற்றொருவர் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிப்பவர். உத்தரவாதம் அளிப்பவர் என்பவர் இணை இசைவாளர். கடன் செலுத்தத் தவறினால் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்.)
உங்களது தற்போதைய தொழில் வளர்ச்சி கடனை HDFC வங்கிக்கு மாற்றி, குறைந்த EMI-யுடன், எங்கள் சலுகைகளை அனுபவியுங்கள்.
தற்போதுள்ள கடன் பரிமாற்றத்தில் வட்டி விகிதங்கள் 15.75% * வரை குறைவாக உள்ளன.
செயலாக்க கட்டணம் 0.99% வரை குறைவாக உள்ளது.
உங்கள் கடன் நிலுவையை பரிமாற்றம் செய்ய, இப்போதே விண்ணப்பிக்கவும்.
இது எந்த செக்யூரிட்டியும் இன்றி ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகிறது. வரம்பு ஒரு தனி நடப்புக் கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது, இது ஒப்பந்த காலம் முடியும் வரை மாதந்தோறும் குறைகிறது. பயன்படுத்தப்பட்ட தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்துங்கள்.
ரூ .5 லட்சம் முதல் 15 லட்சம்* வரை டிராப்லைன் ஓவர் டிராஃப்ட் வசதி
உத்தரவாதம் அளிப்பவர் தேவையில்லை (உத்தரவாதம் அளிப்பவர் மற்றொருவர் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிப்பவர். உத்தரவாதம் அளிப்பவர் இணை இசைவாளராகி, கடனை செலுத்தத் தவறும் நிலை ஏற்பட்டால் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.) / செக்யூரிட்டி தேவை.
12-48 மாதங்கள் வரை ஒப்பந்த காலம்.
கவர்ச்சிகரமான வட்டி விகிதம்
வரம்பின் முதல் 6 மாதங்களில் முன்கூட்டியே/ பகுதி கணக்கை முடித்தல் அனுமதிக்கப்படாது.
உங்கள் தொழில் வளர்ச்சி கடனுக்கான தகுதியை ஆன்லைனில் அல்லது எந்தவொரு கிளையிலும் வெறும் 60 வினாடிகளில் சரிபார்க்கலாம். வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளின் முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்துதலின் அடிப்படையிலேயே கடன்கள் வழங்கப்படும்.
உங்கள் கடனை 12 முதல் 48 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
உங்கள் கடன் பற்றிய எந்தவொரு உதவிக்கும், நீங்கள் SMS, வெப்சாட், Click2Talk மற்றும் ஃபோன் பேங்கிங் வழியாக எங்களை அணுகலாம்.
மிகவும் குறைந்த அளவிலான பிரீமியம்* செலுத்துவதன் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாத்திடுங்கள். மற்றும் உங்கள் கடனை எங்கள் கடன் பாதுகாப்பு திட்டத்துடன் பாதுகாத்திடுங்கள்.
திட்டம்:
நன்மைகள்:
வாடிக்கையாளர் இறந்தால் கடன் தொகையை செலுத்துவதன் மூலம் குடும்பத்தை பாதுகாக்கிறது.
ஆயுள் பாதுகாப்பு - மன அமைதியை வழங்குகிறது.
கடனை திருப்பிச் செலுத்த மற்ற சேமிப்புகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பொருந்தக்கூடிய தகுந்த சட்டங்களின்படி வரி சலுகைகள்.
ஒரு வசதியான தொகுப்பு - கடன் + காப்பீடு.
இதற்கான பிரீமியம், கடன் வழங்கப்படும் நேரத்தில் சேவை வரி விதித்த பின்னர் மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தில் பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணம் / வரி ஆகியற்றைப் பெற்ற பின்னர் கடன் தொகையிலிருந்து கழிக்கப்படும்.
வாடிக்கையாளர் இயற்கையாக / எதிர்பாரா விபத்தில் மரணமடைந்தால், வாடிக்கையாளர் / பரிந்துரைக்கப்பட்டவர் பேமெண்ட் பாதுகாப்பு காப்பீட்டை (கிரெடிட் ப்ரொடெக்ட்) பெறலாம், இது கடனில் நிலுவையில் உள்ள முதன்மை தொகைக்கு அதிகபட்சமாக கடன் தொகைக்கு உத்தரவாதம் தருகிறது.
*காப்பீட்டாளர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். மேற்கண்ட தயாரிப்பை HDFC லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வழங்கியுள்ளது.