1. கோல்டு லோன் என்றால் என்ன?
நீங்கள் தங்கம் அல்லது தங்க நகைகள் மீது வாங்கிய கடன் தங்க நகை கடன்/கோல்டு லோன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஈடாக உங்கள் தங்கத்தை நீங்கள் வங்கியில் ஒப்படைப்பதே கோல்டு லோன் என வகைப்படுத்தப்படுகிறது. இணக்கமான கால வரையறையுடன் அசத்தலான கோல்டு லோன் வட்டி விகிதங்களில் குறைந்த ஆவண செயலாக்கத்துடன் உங்கள் தங்கத்தின் மீதான கடனை பெறுதல் என்பது விரைவான மற்றும் வெளிப்படையான செயல்முறையாகும்.
2. கோல்டு லோன் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் யார்?
21 முதல் 60 வயதுக்குட்பட்ட இந்திய குடியுரிமை பெற்ற ஒரு தொழிலதிபர், வர்த்தகர், விவசாயி, ஊதியம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்யும் தனிநபர் ஆகியோர் HDFC வங்கி மூலம் கோல்டு லோனுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவராவார். நீங்கள் எங்கள் கோல்டு லோன் தகுதி கால்குலேட்டர் மூலம் உங்கள் தகுதியை சோதித்து பார்க்கலாம்.
3. கோல்டு லோனுக்கு விண்ணப்பிக்க எந்தெந்த ஆவணங்கள் தேவை?
HDFC பேங்கில் தங்கத்தின் மீதான கடன் பெற நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியல்:
- ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
- PAN (நிரந்தர கணக்கு எண்)கார்டு (கீழே உள்ள குறிப்பிடப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன்) அல்லது ஃபார்ம் 60
- பாஸ்போர்ட் (காலாவதியாகாதது)
- ஓட்டுநர் உரிமம் (காலாவதியாகாதது)
- வாக்காளர் அடையாள அட்டை
- UIDAIயினால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு
- விவசாய கூட்டு தொழில் ஆவணங்கள் (விவசாய வாடிக்கையாளர்களுக்கு புல்லட் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில்)
4. நீங்கள் எப்போது கோல்டு லோனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்?
உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு நிதி தேவைப்படும் போது நீங்கள் தங்கத்தின் மீதான கடன் பெற விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு அருகில் உள்ள எந்த HDFC வங்கிக் கிளையிலும் கவுண்டரில் நிதியைப் பெறுவதற்கான நேரம் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே என்பதால், அவசரகாலத்தில் கோல்டு லோன் விண்ணப்பிப்பதற்கான இந்த சிறந்த பயன்பாட்டை உபயோகிக்கலாம்.
5. கோல்டு லோன் செலுத்தப்படவில்லை என்றால் என்ன நடக்கும்?
கோல்டு லோனை திருப்பிச் செலுத்தப்படாத போது, வங்கி கடன் பெற்றவருக்கு EMI பேமெண்ட் பற்றி இமெயில், டெக்ஸ்ட்கள் மூலம் நினைவூட்டல்களை அனுப்ப துவங்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கோல்டு லோன் தொகைக்கு ஏற்ப சில அபராதக் கட்டணங்கள் அல்லது வட்டி விகிதங்கள் விதிக்கப்படுகின்றன. இறுதியில், வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட உரிய காலக்கட்டத்தில் பல பின்தொடர்தல்களுக்குப் பிறகு கோல்டு லோனுக்கான கடன் தொகை செலுத்தப்படாவிட்டால், வங்கி தங்க ஆபரணங்களை விற்க அல்லது ஏலம் விட்டு கடன் தொகையை திருப்பிச் செலுத்தும்.
6. நான் எவ்வாறு கோல்டு லோனை திருப்பிச் செலுத்துவது?
கோல்டு (தங்கத்தின்) மீதான லோனைவட்டி விகிதம் மற்றும் வழங்கப்படும் கால வரையறை அடிப்படையில் கணக்கிடப்பட்ட எளிதான மாதாந்திர தவணைகள் மூலம் திருப்பிச் செலுத்தலாம். டெர்ம் லோன், ஓவர் டிராஃப்ட் அல்லது புல்லட் திரும்பச் செலுத்தும் வசதி போன்ற கடன் விருப்பங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி அல்லது வழக்கமான EMI மட்டும் செலுத்துதல் போன்ற விருப்பங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு லட்சத்திற்கு குறைந்த பட்சம் ₹ 1,000 வரையிலான குறைந்த மாதாந்திர பண வெளியேற்றத்தை கொண்டிருக்கலாம் (ஒரு வருடத்திற்கு 12% என்ற குறிப்பிட்ட விகிதத்தின் அடிப்படையில்) ஒருவேளை புல்லட் திரும்ப செலுத்துதல் முறையை தேர்ந்தெடுத்தால் வட்டி மற்றும் அசல் தொகையை 1 வருடத்திற்கு பிறகு திரும்ப செலுத்தலாம்.
7. எனது கோல்டு லோனை ஃபோர்குளோஸ் செய்யலாம் அல்லது முன்கூட்டியே செலுத்த முடியுமா?
ஆம், உங்கள் கோல்டு லோனை நீங்கள் ஃபோர்குளோஸ் செய்யலாம் அல்லது முன்கூட்டியே செலுத்தலாம். இருப்பினும், சில கட்டணங்கள் பொருந்தும். ஃபோர்குளோஷருக்கு, தங்கத்தின் மீதான கடன் விண்ணப்பித்த 6 மாதங்களுக்குள் செலுத்தப்பட்டால் கட்டணங்கள் 2% + GST-யாக இருக்கும். 6 மாதங்களுக்குப் பிறகு செலுத்தப்பட்டால் ஃபோர்குளோஷர் கட்டணங்கள் ஏதுமில்லை.
குறைவாக பார்க்க