1.1 | செலுத்தப்பட்ட சம்பளத்தை ரத்து செய்தல்: எனது முதலாளி / நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் என் அக்கவுண்டில் முதலாளி / நிறுவனத்தின் அறிவுறுத்தல்களால் வரவு வைக்கப்படும் அதிகப்படியான தொகையை மீட்கும் வகையில், என் கவனத்துக்கு உட்பட்டு குறிப்பிட்ட தொகையை நிறுத்தி வைக்கவும்/டெபிட் செய்யவும் /செலுத்தப்பட்ட பணத்தை ரத்து செய்யவும் வங்கிக்கு மாற்ற முடியாத எந்தவித நிபந்தனையும் இல்லாத அங்கீகாரத்தை அளிக்கிறேன். வங்கியினால் நிறுத்திவைக்கப்பட்ட தொகை/டெபிட் ஆன தொகை /செலுத்தப்பட்ட பணத்தை ரத்து செய்தல் போன்றவற்றிற்கு வங்கி பொறுப்பாகாது
|
1.2 | முதலாளி / நிறுவனத்துடனான எனது பணி நிமித்தம் காரணமாக என் அக்கவுண்ட் வங்கியில் திறக்கப்பட்டுள்ளது என்பதையும், அது "சேலரி அக்கவுண்ட்" ஆக நியமிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்கிறேன். முதலாளி / நிறுவனம் மற்றும் வங்கிக்கு இடையிலான ஏற்பாட்டிற்கு இணங்க, வங்கியின் முழு விருப்பப்படி, முதலாளி / நிறுவனத்துடனான எனது பணி தொடரும் வரை அல்லது முதலாளி / நிறுவனம் மற்றும் வங்கிக்கு இடையிலான உறவு தொடரும் வரை இந்த சேலரி அக்கவுண்டில் சில வசதிகளுக்கு நான் தகுதி பெற்றிருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் முதலாளி / நிறுவனத்திலிருந்து விலகுவதை குறித்து வங்கிக்கு தெரிவிப்பேன். "முதலாளி / நிறுவனம்" என்ற வார்த்தைகள் நான் பணிபுரியும் நிறுவனத்தையும், யாருடைய வேண்டுகோளின் பேரில் வங்கியில் சேலரி அக்கவுண்ட் துவங்கப்படுகிறது என்பதையும் குறிக்கிறது.
|
1.3 | முதலாளி / நிறுவனம் மற்றும் வங்கிக்கு இடையிலான வழக்கமான சம்பளம் செலுத்தப்படும் என்ற அடிப்படை ஒப்பந்தத்தினால் மட்டுமே சேலரி அக்கவுண்டில் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறேன். |
1.4 | எனது முதலாளி / நிறுவனம் வழங்கிய அக்கவுண்ட்களில் ஊதியத்தை வரவு வைப்பதற்கு முன் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் பெயர் அக்கவுண்ட் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்பதை நான் புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறேன். |
1.5 | சம்பளத்தை செலுத்த சரியான அக்கவுண்ட் எண்ணை வழங்குவதற்கான பொறுப்பு எனது முதலாளி / நிறுவனத்திடம் மட்டுமே இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்கிறேன், மேலும் முதலாளி / நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட தவறான அக்கவுண்ட் எண்ணினால் விளையும் தவறான பண பரிமாற்றத்திற்கு நான் வங்கியை பொறுப்பேற்றுக் கொள்ள கூறமாட்டேன்.
|
1.6 | எனது சேலரி அக்கவுண்டில் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து ஊதியம் செலுத்தப்படவில்லை என்ற பட்சத்தில், அக்கவுண்ட் வைத்திருப்பவர் / எனக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சேலரி அக்கவுண்டின் நிலையை சேவிங்ஸ் ரெகுலர் அக்கவுண்டாக மாற்றுவதற்கான முழு உரிமையும் வங்கிக்கு உண்டு என்பதை நான் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன், மேலும் HDFC வங்கியின் சேவிங்ஸ் ரெகுலர் அக்கவுண்டிற்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்த அக்கவுண்ட் நிலை மாற்றப்பட்ட நாளிலிருந்து பொருந்தும். சேவிங்ஸ் ரெகுலர் அக்கவுண்டிற்கு பொருந்தும் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் அம்சங்கள் வங்கியின் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருக்கின்றது.
|
1.7 | எனது சேலரி அக்கவுண்டில் தொடர்ந்து எந்த தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்பதை கவனிக்க நேர்ந்தால் மற்றும் / அல்லது முதலாளி / நிறுவனத்தின் அறிவுறுத்தலின் காரணத்தினால் அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் நான் முதலாளி / நிறுவனத்தின் சேவையிலிருந்து விலகிவிட்டால் எதுவாக இருப்பினும் எனக்கு 30 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு அளித்த பிறகு எனது சேலரி அக்கவுண்ட்டை மூடுவது என்பது முற்றிலும் வங்கியின் தனிப்பட்ட விருப்பம் என்பதை நான் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன்.
|
1.8 |
என் அக்கவுண்டின் அனைத்து ஜாயிண்ட் ஹோல்டர்களின் ஒப்புதலுடன் என் அக்கவுண்ட்டின் செயல்பாட்டு முறையில் ஏதேனும் மாற்றத்தை வங்கி செய்ய முனைந்தால் நான் அதை ஒப்புக் கொள்கிறேன். மேலும் வங்கி என் அக்கவுண்டின் அனைத்து ஜாயிண்ட் ஹோல்டர்களின் ஒப்புதலின்றி வரும் எந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். நான் மேலும், அக்கவுண்ட் துவங்கும் நேரத்தில் ஒப்புக் கொண்ட செயல்பாட்டு முறைக்கு உரிய அறிவுறுத்தல்களையே வங்கி தொடர்ந்து பின்பற்றும் என்பதை ஒப்புக் கொள்வது மட்டுமின்றி அதை ஏற்றுக்கொள்கிறேன்.
|
2 | சேலரி அக்கவுண்ட் வாடிக்கையாளருக்கான கூடுதல் நன்மை - சேலரி அக்கவுண்ட்டில் பர்சனல் ஆக்சிடென்டல் டெத் கவர் (PADC/Personal Accidental Death Cover)
|
2.1 | சேலரி அக்கவுண்ட் மற்றும் டைட்டானியம் ராயல் டெபிட் கார்டு மூலம் கிடைக்கும் காப்பீட்டு திட்டத்தின் பரந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு
- விபத்தினால் மட்டுமே உண்டாகும் உடல் காயத்தின் விளைவினால் ஏற்படும் மரணம்
- விபத்து நடந்த தேதியிலிருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் வேறெந்த உடல்நிலை காரணமுமின்றி விபத்தினால் ஏற்பட்ட உடல் காயத்தினால் மட்டுமே நேரடியாக தற்செயலாக ஏற்படும் மரணம்
- சம்பவம் நடந்த அன்று அக்கவுண்ட் ஹோல்டர்/வைத்திருப்பவர்
- மேல் குறிப்பிட்ட சலுகை நீட்டிக்கப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த சான்றளிக்கப்பட்ட ஊழியர்களாக இருத்தல் வேண்டும் (70 வயதுக்கு உட்பட்டவர்கள்)
- HDFC வங்கியின் கார்ப்பரேட் சேலரி அக்கவுண்ட் ப்ரோக்ராமின் கீழ் சேலரி அக்கவுண்ட் வைத்திருப்பதுடன் அந்த மாதத்திற்கான சம்பளம் அல்லது முந்தைய மாதத்திற்கான சம்பளத்தை பெற்றிருத்தல் அவசியம்.
- இறந்த தேதியிலிருந்து அதற்கு முந்தைய ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு முறையாவது டெபிட் கார்டை பர்ச்சேஸ் பரிவர்த்தனைக்கு உபயோகித்தல் அவசியம்
- ஒருவேளை விமான விபத்தில் இறப்பு (ஏர் ஆக்சிடென்டல் டெத்) நேர்ந்தால் சேலரி அக்கவுண்டுடன் இணைந்திருக்கும் டெபிட் கார்டு மூலம் கிளைம் டிக்கெட் வாங்குதல் அவசியம்
- இந்த காப்பீடு பிரைமரி அக்கவுண்ட் ஹோல்டருக்கு மட்டுமே வழங்கப்படும்
சேலரி ஃபேமிலி அக்கவுண்ட் மூலம் கிடைக்கும் காப்பீட்டு திட்டத்தின் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு - விபத்தினால் மட்டுமே உண்டாகும் உடல் காயத்தின் விளைவினால் ஏற்படும் மரணம்
- விபத்து நடந்த தேதியிலிருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் வேறெந்த உடல்நிலை காரணமுமின்றி விபத்தினால் ஏற்பட்ட உடல் காயத்தினால் மட்டுமே நேரடியாக தற்செயலாக ஏற்படும் மரணம்
- சம்பவம் நடந்த அன்று அக்கவுண்ட் ஹோல்டர்/வைத்திருப்பவர்
- 70 வயதுக்கு உட்பட்ட வயது உடையவராக இருத்தல் வேண்டும்
- சேலரி அக்கவுண்ட் வைத்திருப்பவரின் அவன் / அவள் உறவின் காரணமாக சேலரி ஃபேமிலி அக்கவுண்ட் வைத்திருப்பது மற்றும்
- அத்தகைய சேலரி அக்கவுண்ட் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டாகவும் இருப்பதுடன் அதில் அந்த மாதத்திற்கான சம்பளம் அல்லது முந்தைய மாதத்திற்கான சம்பளத்தை பெற்றிருத்தல் அவசியம்.
- இறந்த தேதியிலிருந்து அதற்கு முந்தைய ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு முறையாவது டெபிட் கார்டை பர்ச்சேஸ் பரிவர்த்தனைக்கு உபயோகித்தல் அவசியம்
- ஒருவேளை விமான விபத்தில் இறப்பு(ஏர் ஆக்சிடென்டல் டெத்) நேர்ந்தால் சேலரி ஃபேமிலி அக்கவுண்டுடன் இணைந்திருக்கும் டெபிட் கார்டு மூலம் கிளைம் டிக்கெட் வாங்குதல் அவசியம்
- இந்த காப்பீடு பிரைமரி அக்கவுண்ட் ஹோல்டருக்கு மட்டுமே வழங்கப்படும்
|
2.2 | கிளைம் செய்வதற்கான செயல்முறை: - ஒருவேளை அக்கவுண்ட் ஹோல்டர் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பயனீட்டாளர்(பெனீபீஷியரி)அக்கவுண்ட் இருக்கும் கிளையை அணுக வேண்டும், அதன் பின் கிளை வாடிக்கையாளருக்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து வழிகாட்டும்.
- கிளை மூலம் இந்த ஆவணத்திற்கான ரசீது கிடைத்ததும், எங்கள் சேலரி அக்கவுண்ட் ஹோல்டருக்கான செய்யும் சிறப்பு மரியாதையாக, HDFC வங்கியே உரிமைகோரலை(கிளைமை) செயல்படுத்த காப்பீட்டு நிறுவனத்தை அணுகும். இருப்பினும், கிளையில் ஆவணங்களுக்காக நீங்கள் ரசீதை வைத்து, உரிமைகோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தவறாக எண்ண வேண்டாம். தவிர்க்க முடியாத காரணத்தினால் திடீர் உயிரிழப்பு ஏற்பட்டால், பயனாளி(பெனீபீஷியரி) உடனடியாக அக்கவுண்ட் இருக்கும் கிளைக்கு தெரிவிக்க வேண்டும். பாலிசியின் ஒப்பந்தப் படி, காப்பீட்டு நிறுவனத்திற்கு சம்பவம் நடந்த 30 நாட்களுக்குள் (வங்கி மூலம்) தெரிவிக்கப்பட வேண்டும், மேலும் உரிமை கோரல் தொடர்பான அனைத்து துணை ஆவணங்களும் குறிப்பிட்டவர் மறைந்த தேதியிலிருந்து அறுபது (60) நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
|
2.3 | பொறுப்பு துறப்பு - வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு முழுவதும் காப்பீட்டு நிறுவனம் மட்டுமே பொறுப்பாகும் என்றும் அதற்கு எந்த வகையிலும் வங்கி பொறுப்பேற்காது என்பதையும், ஒருவேளை கார்டு ஹோல்டர் இறக்க நேர்ந்தால் அந்த இழப்பீட்டு காப்பீடு தொடர்பாக எழும் எந்த பிரச்சனைக்கும் வங்கி பொறுப்பேற்காது என்றும், காப்பீட்டு தொகையில் ஏதெனும் தொகை பிடிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ, அதை மீட்கவோ அல்லது அதற்கு நிகரான தொகையை பெற, செயல்படுத்த அல்லது கிளைமை செட்டில்மென்ட் செய்ய அல்லது எதுவாக இருப்பினும் அம்மாதிரியான எல்லா விஷயங்களும் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தை தொடர்புக்கொண்டு தீர்வுக்காண வேண்டும் என்பதையும் கணக்கு வைத்திருப்பவர் குறிப்பாக ஒப்புக்கொள்கிறார்.
- மேலும் கணக்கு வைத்திருப்பவர், அவ்வாறு வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகை, சம்பந்தப்பட்ட காப்பீட்டுக் கொள்கையின்(பாலிசி) விதிமுறைகளின்படி அவருடைய சம்பளக் கணக்கு நல்ல நிலையில் பராமரிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே வழங்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். அந்த கணக்கு எந்தவொரு காரணத்திற்காகவாவது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மூடப்பட்டாலோ அல்லது சேவிங்ஸ் ரெகுலர் அக்கவுண்டாக மாற்றப்பட்டாலோ, அத்தகைய காப்பீட்டுத் திட்டத்தின் நன்மை தானாகவே ipso facto ஆக மாறி அந்த கணக்கு மூடப்பட்ட அல்லது மாற்றப்பட்ட தேதியிலிருந்து அந்த காப்பீடு கிடைப்பது நிறுத்தப்படும். மேலும் கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கை தொடர்ந்து உபயோகித்தால் கூட, அத்தகைய காப்பீட்டு தொகையின் மூலம் கிடைக்கும் பயனை வங்கி எந்த நேரத்திலும் நிறுத்தி வைத்தல், திரும்பப் பெறுதல் அல்லது ரத்து செய்தல், போன்றவற்றை செய்யலாம் மேலும் வங்கிக்கு இந்த பயனை தொடரவேண்டும் என எந்தவிதமான பிணைப்பும் கிடையாது என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்.
- காப்பீட்டு நிறுவனம் மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் காப்பீட்டு திட்டம் என்பது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
|
3 | கிட்'ஸ் அட்வான்டேஜ் அக்கவுண்ட் (Kid's Advantage Account ) |
3.1 | ஒரு மைனர் சார்பாக அவரது/அவளது நேச்சுரல் கார்டியனால் அல்லது தகுதிவாய்ந்த அதிகார வரம்புக்கு உட்பட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கார்டியனால் ஒரு கணக்கு திறக்கப்படலாம். மேற்கூறிய கணக்கில், மைனர் மேஜர் ஆகும் வரை மேற்கொள்ளப்படும் எந்த 1 விளக்கத்தின் அனைத்து பரிவர்த்தனைகளிலும் கார்டியன் மைனரை பிரதிநிதித்துவப்படுத்துவார். மைனர் மேஜர் ஆனவுடன், கணக்கை இயக்குவதற்கான கார்டியனின் உரிமை ரத்து செய்யப்படும். |
3.2 | மைனரின் கணக்கிற்கு எந்தவொரு ஓவர் டிராஃப்ட் அல்லது எந்தவொரு கடன் வாங்கும் வசதியும் கிடைக்காது என்று கார்டியன் ஒப்புக்கொள்கிறார். |
3.3 | ஏதேனும் காரணத்திற்காக போதிய இருப்பு இல்லாமல் இருந்தால் அல்லது மைனரின் கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு மேல் பணம் செலவழித்திருக்கும்/எடுத்திருக்கும் பட்சத்தில், அந்த கணக்கில் வழங்கப்படும் எந்தவொரு காசோலையையும் நிராகரிப்பதற்கு வங்கிக்கு முழு உரிமை உண்டு. இதனால் எழும் எந்த ஒரு பிரச்சனைக்கும் வங்கி பொறுப்பேற்காது. |
3.4 | ATM/டெபிட் கார்டை வழங்கும் போது, ATM/டெபிட் கார்டுக்கு பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் மற்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அதன் பயன்பாடும் பொருந்தும் என்று கார்டியன் ஒப்புக்கொள்கிறார். |
3.5 | ATM/டெபிட் கார்டை பயன்படுத்துவது உட்பட வித்டிரா செய்வது போன்றவற்றிற்கு மைனராக இருப்பதன் அடிப்படையில் மைனருக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பொறுப்பையும் இணைக்காது என்பதை கார்டியன் ஒப்புக்கொண்டு அதனை அங்கீகரிக்கிறார். அதன்படி, அத்தகைய பொறுப்பு முழுதும் கார்டியனால் கருதப்படுகிறது மற்றும் கார்டியனால் மட்டுமே நிறைவேற்றப்படும். ATM/டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவது உட்பட மைனர் கணக்கில் உள்ள அனைத்து கடன்களுக்கும் கார்டியன் முழுமையாக பொறுப்பேற்பார். |
3.6 | மைனர் கணக்கிலிருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்கள், அபராதங்கள், வட்டிகள், செலவுகள் அல்லது எந்தவொரு தொகையையும் மீட்டெடுக்க கார்டியனின் எந்தவொரு கணக்கையும் பற்று வைக்க வங்கிக்கு உரிமை உண்டு என்று கார்டியன் ஒப்புக்கொள்கிறார். |
3.7 | மைனரின் கணக்கில் கார்டியனுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்ற ஏதேனும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டால், 15.59.1 மற்றும் 15.59.2 ஆகிய பிரிவுகளின் விதிமுறை இங்கு தேவைக்கேற்ப பொருந்தும். இழப்பீடு தொடர்பாக அல்லது அது வழங்கும் பொருட்டு ஏதேனும் தனிப்பட்ட தகவல்கள் தேவைப்பட்டால், வங்கி அதனை அந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு நம்பிக்கையுடன் வெளிப்படுத்த கார்டியன் ஒப்புக்கொள்கிறார். |
3.8 | மைனரின் கணக்கைத் துவங்கி ATM/டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தல் (வித்ட்ராவல்) / பரிவர்த்தனைகள் செய்தல் உட்பட கணக்கை உபயோகித்தல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மைனரின் கணக்கில் மைனருக்கு பாதுகாவலர் பணம் எடுத்தல் (வித்ட்ராவல்) / பரிவர்த்தனைகள் செய்தல் போன்ற அனைத்து கிளைம்கள் போன்றவற்றின் விளைவினால் வங்கிக்கு எந்த நேரத்திலும் ஏற்படும், இருக்கும், பாதிக்கப்படும் அல்லது இதனால் விளையும் எந்த ஒரு பிரச்சனைக்கும், கணக்கில் செய்யக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் , உரிமைகோரல்கள் (கிளைம்ஸ்), கோரிக்கைகள், செயல்முறைகள், சேதங்கள், இழப்புகள், செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவினங்கள் எதுவாக இருப்பினும் அந்த இழப்பீடை பாதுகாவலர் (கார்டியன்) ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளிக்கிறார்.
|
3.9 | பொறுப்பு துறப்பு கிளைம் செய்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இழப்பு ஏற்பட்ட தேதியிலிருந்து அறுபது (60) நாட்களுக்குள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் இழப்பு ஏற்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கிளைம் செய்ய வேண்டும் |
4 | "பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்:" |
4.1 | ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டை வைத்திருப்பவர்கள் HDFC வங்கியில் வேறு எந்த சேவிங்ஸ் அக்கவுண்ட்டையும் தொடங்க முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன் |
4.2 | ஆகவே, HDFC வங்கியில் என்னிடம் வேறு ஏந்த சேவிங்ஸ் அக்கவுண்ட்(கள்) இருந்தால், பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டை தொடங்கிய 30 நாட்களுக்குள் இதுபோன்ற மற்ற சேவிங்ஸ் அக்கவுண்ட்(களை) மூட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். |
4.3 | பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டைத் தொடங்கிய 30 நாட்களுக்குள், அத்தகைய அக்கவுண்ட்(கள்) என்னால் மூடப்படாவிட்டால், ஒழுங்குமுறை வழிகாட்டுதலின் கீழ், பொருந்தக்கூடிய பிற சேவிங்ஸ் அக்கவுண்ட்(களை) (ஏதேனும் இருந்தால்) மூடுவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். |
4.4 | முழுமையான KYC இல்லாமல் இருக்கும், இந்தியாவில் வசிக்கக்கூடிய எந்த ஒரு தனிநபரும் BSBDA சிறு சேமிப்பு கணக்குத் துவங்க தகுதியுடையவர் ஆவார். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், இங்கு வசிக்கும் தனிநபர் யாருக்கெல்லாம் பின்வருபவை இல்லையோ அவர்கள்: வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களின் பட்டியலின்படி போட்டோ ஐடி ஆதாரம். வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களின் பட்டியலின்படி முகவரி ஆதாரம்(அட்ரஸ் ப்ரூப்). BSBDA சிறு சேமிப்பு கணக்கை இயக்க தேவையான விதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
|
4.5 |
ஒரு BSBDA(பி.எஸ்.பி.டி.ஏ) வின் சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவராக நான் பின்வரும் பரிவர்த்தனைக்கான வரம்புகளை மட்டுமே உபயோகிப்பேன்
- BSDBA சிறு சேமிப்பு கணக்கின் மொத்த இருப்பு எப்போதும் 50,000 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கக்கூடாது
அல்லது - BSDBA சிறு சேமிப்பு கணக்கின் மொத்த கிரெடிட்ஸ் எப்போதும் 1,00,000 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கக்கூடாது
அல்லது - BSDBA சிறு சேமிப்பு கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு மொத்த பணம் எடுத்தல்(வித்ட்ராவல்) மற்றும் பரிமாற்றங்கள்(ட்ரான்ஸ்பர்) ரூ.10,000க்கு மேல் அதிகரிக்கக்கூடாது
கணக்கில் இருக்கும் இருப்பு தொகை ரூ. 50,000க்கு மேல் அதிகரித்தால், இருப்பு தொகை ரூ. 50,000லிருந்து குறையும் வரை வேறெந்த கடன் பரிவர்த்தனைகளும் சிறு சேமிப்பு கணக்கில் அனுமதிக்கப்படாது.
ஒரு நிதியாண்டில் வரவு வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகை ரூ. 1,00,000க்கு மேல் அதிகரித்தால், அந்த நிதியாண்டு முடியும் வரை வேறெந்த கடன் பரிவர்த்தனைகளும் சிறு சேமிப்பு கணக்கில் அனுமதிக்கப்படாது.
- பணம் எடுத்தல்(வித்ட்ராவல்) மற்றும் பரிமாற்றங்கள்(ட்ரான்ஸ்பர்) ரூ.10,000க்கு மேல் அதிகரித்தால் அந்த காலண்டர் மாதம் முடியும் வரை வேறெந்த கடன் பரிவர்த்தனைகளும் சிறு சேமிப்பு கணக்கில் அனுமதிக்கப்படாது
|
4.6 | ஒரு BSBDA(பி.எஸ்.பி.டி.ஏ) வின் சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவராக நான் HDFC வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியவை:
- அக்கவுண்ட் தொடங்கிய 12 மாதங்களுக்குள், செல்லுபடியாகும் KYC க்கு (BSBDA சிறு அக்கவுண்ட்களுக்கு என குறிப்பிடப்பட்ட KYC இன் ஏற்றுக்கொள்ளத்தக்க பட்டியலின் படி) விண்ணப்பித்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்
- அக்கவுண்ட் தொடங்கிய 12 மாதங்களுக்குள் செல்லுபடியாகும் KYC க்கு விண்ணப்பித்திருப்பதற்கான ஆதாரமாக பின்வரும் ஆவணங்கள் கருதப்படும்:
BSBDA ஸ்மால் அக்கவுண்ட் - செல்லுபடியாகும் KYCக்கு விண்ணப்பித்திருப்பதற்கான ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் பட்டியல்
| அடையாள ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
| KYC ஆவணம் | ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஆவணங்கள் | பாஸ்போர்ட் [ காலாவதி ஆகாதது] |
அரசாங்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விண்ணப்ப படிவத்தின் நகல்
| PAN கார்டு | படிவம் 49A வின் நகல்
| தேர்தல் / வாக்காளர் அட்டை | படிவம் 6 இன் நகல் | ஓட்டுநர் உரிமம் - நிரந்தரமானது (மகாராஷ்டிரா அரசினால் வழங்கப்பட்டதை தவிர) | RTOமூலம் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகல் | இந்திய அரசு வழங்கிய ஆதார் கார்டு / கடிதம்
|
UIDAI யினால் வழங்கப்பட்ட ஆதார் ஒப்புதல் கடிதம் (இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு)
| NREGA கார்ட். | NREGA வழங்கிய விண்ணப்ப படிவத்தின் நகல் |
|
| முகவரியின் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் | KYC ஆவணம் | ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஆவணங்கள் | பாஸ்போர்ட் [ காலாவதி ஆகாதது] | அரசாங்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விண்ணப்ப படிவத்தின் நகல்
| ஓட்டுநர் உரிமம் - நிரந்தரமானது (மகாராஷ்டிரா அரசினால் வழங்கப்பட்டதை தவிர) | RTOமூலம் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகல் | ரேஷன் கார்டு | விண்ணப்ப படிவத்தின் நகல்/ஒப்புதலுக்கான ஸ்லிப்(அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்) | இந்திய அரசு வழங்கிய ஆதார் கார்டு / கடிதம்
| UIDAI யினால் வழங்கப்பட்ட ஆதார் ஒப்புதல் கடிதம் (இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு)
| NREGA கார்டு. | NREGA வழங்கிய விண்ணப்ப படிவத்தின் நகல் | மூத்த குடிமக்களுக்கு என இந்திய மாநில / மத்திய அரசு வழங்கிய கார்டு. (அதற்கான முகவரி இருந்தால்).
| இந்திய மாநில / மத்திய அரசு வழங்கிய விண்ணப்ப படிவத்தின் நகல்/ஒப்புதலுக்கான ஸ்லிப்(அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்) | மாநகராட்சி வழங்கிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிக்கான இருப்பிட(டொமிசைல்) சான்றிதழ். | மாநகராட்சி வழங்கிய விண்ணப்ப படிவத்தின் நகல்/ஒப்புதலுக்கான ஸ்லிப்(அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்)
|
- அக்கவுண்ட் துவங்கிய 24 மாதங்களுக்குள் வங்கியின் ஏற்றுக்கொள்ளப்பட்ட KYC பட்டியலின்படி இருக்கும் அசல் KYC (அடையாள சான்றிதழ், முகவரி சான்றிதழ் மற்றும் புகைப்படம் )
|
4.7 |
BSBDA - சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் HDFC வங்கியில் வேறு எந்த CASA / TD / RD யையும் துவங்குவதற்கான தகுதியை இழக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
|
4.8 | BSBDA சிறு சேமிப்பு கணக்குத் துவங்கிய 7 நாட்களுக்குள் நடப்பு(கரண்ட்), சேமிப்பு, டெர்ம் டெபாசிட் கணக்கு (கள்) (ஏதேனும் இருக்கும் பட்சத்தில்) அந்த கணக்கு(கள்) என்னால் மூடப்படாவிட்டால் அதை மூடுவதற்கான உரிமை வங்கியிடம் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் |
5 | மூத்த குடிமக்களுக்கான கணக்கு (சீனியர் சிட்டிஸன் அக்கவுண்ட்)
மூத்த குடிமக்களுக்கான கணக்கினால் (சீனியர் சிட்டிஸன் அக்கவுண்ட்) கஸ்டமர்களுக்கு கிடைக்கும் கூடுதல் சலுகைகள்
விளக்கம் |
காப்பீட்டு தொகை
| தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் காப்பீடு
(இழப்பீட்டு காப்பீடு) ( |
ஒரு வருடத்திற்கு ரூ .50,000/- | தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் (ஒரு வருடத்திற்கு ஒரு கிளைம்)
|
ஒரு வருடத்தில் 15 நாட்களில்அதிகபட்சம் ஒருநாளுக்கு ரூபாய்.500/- |
தற்போது பாலிசி HDFC ERGO இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடம் உள்ளது.
காப்பீட்டு திட்டத்தின் பரந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு:
|
5.1 | தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழங்கப்படும் காப்பீடு: (Accidental Hospitalization Cover): - இந்த காப்பீடு சீனியர் சிட்டிசன் அக்கவுண்டின் முதல் அக்கவுண்ட் ஹோல்டருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
- இது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும் இழப்பீட்டு காப்பீடு ஆகும்
- பாலிசிக்கு உட்பட்ட காலகட்டத்தில் தற்செயலான உடல் காயம் காரணமாக ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கார்டு ஹோல்டர் குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் நியாயமாக மற்றும் வழக்கமாக ஏற்படும் அதிகபட்சமான மருத்துவ செலவுகளை கணக்கிட்டு அவற்றை காப்பீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் இருந்து இழப்பீட்டு காப்பீடு தொகையை வழங்கும்.
- இதில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளியின் தங்குமிடம், நர்சிங் பராமரிப்பு, மருத்துவ துறையில் தகுதிப்பெற்ற ஊழியர்களின் கவனம், மருத்துவ ரீதியாக தேவைப்படும் செயல்முறைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றிற்கு செலவாகும் நியாயமான கட்டணங்களும் அடங்கும்.
- கிளைமை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்கு, கார்டு ஹோல்டர் விபத்து நடந்த தேதிக்கு முந்தைய 6 மாதங்களில் ஏதேனும் ஒரு வணிக நிறுவனத்தில், டெபிட் கார்டைப் பயன்படுத்தி, குறைந்தது 1 பர்ச்சேஸ் - பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பரிவர்த்தனையை செய்திருக்க வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதே மாதத்தில் - விபத்து நடந்த தேதிக்கு முன்பு செய்யப்பட்ட பர்ச்சேஸ்
(விபத்து நடந்த மாதமாதலால்) பரிவர்த்தனையும் செல்லுபடியாகும். - இந்த காப்பீடு இங்கு வசிக்கும் தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர் அல்லாத நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
|
5.2 | விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் (Accidental Hospital Cash): தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் - இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் கேஷ் பெனிஃபிட்(பண பயனை) வழங்குகிறது, ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ .500 என ஒரு வருடத்தில் 15 நாட்களுக்கு செலுத்தப்படும் காப்பீடாகும். இந்த நோக்கத்திற்காக 'நாள்' என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழுமைப்பெற்ற ஒவ்வொரு (24 மணிநேரமும்) ஆகும்.
|
5.3 | கிளைம் செய்வதற்கான செயல்முறை :
- கார்டு ஹோல்டர் தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், கிளைம் செய்பவர்/கிளைம் செய்பவரின் பிரதிநிதி கணக்கு/அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளையை அணுக வேண்டும், மேலும் தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் குறித்து கஸ்டமருக்கு கிளை வழிகாட்டும். இந்த ஆவணங்களை கிளை பெற்றதும், அதனை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாக, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிளைமைச் செயலாக்குவதற்காக வங்கி, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளும். இருப்பினும், கிளை ஆவணங்களைப் பெறுவதால் அது கிளைமை ஏற்றுக்கொள்கிறது என்று பொருளாகாது. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால் கிளைம் செய்பவர் உடனடியாக அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளைக்கு தெரிவிக்க வேண்டும். பாலிசியின் படி, விபத்து நடந்த 30 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (வங்கி மூலம்) தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
|
5.4 | பொறுப்பு துறப்பு - காப்பீடு என்பது கோரிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு விஷயம், அதனால் எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்தவொரு இழப்பீடு அல்லது கிளைமை செயலாக்குவதற்கு HDFC வங்கி பொறுப்பாகாது
|
6 | “சேவிங்ஸ் மாக்ஸ்” அக்கவுண்ட் ("SavingsMax" Account): சேவிங்ஸ் மாக்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் கூடுதல் சலுகைகள்:
விளக்கம் |
காப்பீட்டு தொகை
|
தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் காப்பீடு(இழப்பீட்டு காப்பீடு) | ஒரு வருடத்திற்கு ரூ.1,00,000/- |
தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் |
ஒரு வருடத்தில் அதிகபட்சம் 15 நாட்களில் ஒருநாளுக்கு ரூபாய்.1000/- |
தற்போது இந்த பாலிசி HDFC ERGO பொது காப்பீட்டில் உள்ளது.
இழப்பீடானது பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சார்ந்து அமையும் : |
6.1 | தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் இழப்பீடு (Accidental Hospitalization Cover ) - இந்த இழப்பீடு சேவிங்ஸ்மாக்ஸ் அக்கவுண்ட்டின் முதல் ஹோல்டருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
- காலண்டரின் முதலாவது காலாண்டு முடிந்ததும், அதாவது கணக்கு தொடங்கிய காலாண்டிற்குப் பின் இது பொருந்தும்.
- இது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு இழப்பீட்டு காப்பீடு ஆகும்
- பாலிசி காலகட்டத்தில், சேவிங்ஸ்மாக்ஸ் கணக்கின் முதல் ஹோல்டர் மருத்துவர் ஆலோசனையின் படி தற்செயலாக ஏற்பட்ட உடல் காயம் காரணமாக குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனமானது நியாயமான மற்றும் வழக்கமான மருத்துவ செலவுகளுக்கு (அதிகபட்சமாக ரூ. 1,00,000/-) இழப்பீடு வழங்கும்.
- தங்கும் இடம், மருத்துவ பராமரிப்பு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஊழியர்களின் கவனிப்பு, மருத்துவ ரீதியாக தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் மருத்துவ நுகர்பொருட்கள் என மருத்துவரின் ஆலோசனையின் படி மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அனைத்து நியாயமான கட்டணங்களும் இதில் அடங்கும்.
- கிளைமை ஏற்றுக் கொண்டு செயல்படுத்த, சேவிங்ஸ்மாக்ஸ் கணக்கின் முதல் ஹோல்டர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியமாகும் -
- விபத்து ஏற்பட்ட காலாண்டிற்கு முந்தைய காலண்டர் காலாண்டில், சராசரி காலாண்டு இருப்புத் தொகையாக ரூ. 25,000 (ஜீரோ அக்கவுண்ட் பேலன்ஸ் நன்மையுடன் குறைந்தபட்சம் ரூ. 1,00,000 / - ஃபிக்சட் டெபாசிட் அனுபவிப்பதைப் பொருட்படுத்தாமல்) வைத்திருக்க வேண்டும்
- விபத்து நடந்த தேதிக்கு முந்தைய 3 மாதங்களில் ஏதேனும் ஒரு வணிக நிறுவனத்தில், டெபிட் கார்டைப் பயன்படுத்தி, குறைந்தது 1 பர்ச்சேஸ் - பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பரிவர்த்தனையை செய்திருக்க வேண்டும்.
- தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய காப்பீட்டுத் தொகை காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும். இது காப்பீட்டு நிறுவனத்துடன் வங்கியில் நீங்கள் தொடங்கி இருக்கும் பாலிசி காலத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1,00,000/- தீரும் வரை செயல்படுத்தப்படும். மேலும், இதனை நீங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
- 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால் மட்டுமே விபத்துக்கான காப்பீடு வழங்கப்படும்.
- இந்த காப்பீடு இங்கு வசிக்கும் தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர் அல்லாத நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
|
6.2 | தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் (Accidental Hospitalization Cash ) - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நிறைவடைந்த நாளுக்கும் இது பணம் பெறும் சலுகையை வழங்குகிறது மற்றும் 24 மணி நேரத்திற்கும் மேலாக விபத்து காரணமாக கஸ்டமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதனை நீங்கள் கிளைம் செய்து கொள்ளலாம். இது பில்கள் இல்லாமல் செய்யப்படும் செலவுகளை ஈடு செய்ய உதவும்
- ஒரு நபருக்கு, ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 15 நாட்கள் வீதம், நாள் ஒன்றிற்கு தலா ரூ. 1000 வழங்கப்படுகிறது, இதில் ‘நாள்’ என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து கணக்கிடப்படும் ஒவ்வொரு 24 மணிநேரமும் நிறைவடைவதாகும்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் கீழ் கிளைம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்சத்தில் மட்டுமே, காப்பீட்டு நிறுவனத்துடன் வங்கியில் நீங்கள் கொண்டிருக்கும் ஒரு பாலிசி காலத்தின் கீழ் 15 நாட்கள் தீர்ந்து போகும் வரை தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்படும்
|
6.3 | கிளைம் செய்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இழப்பு ஏற்பட்ட தேதியிலிருந்து அறுபது (60) நாட்களுக்குள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் இழப்பு ஏற்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கிளைம் செய்ய வேண்டும் |
6.4 | கிளைம் செய்வதற்கான செயல்முறை:
- சேவிங்ஸ்மேக்ஸ் அக்கவுண்ட்டின் முதல் ஹோல்டர் தற்செயலாக மருத்துவமனையில் இருக்கும் பட்சத்தில், கிளைம் செய்பவர்/கிளைம் செய்பவரின் பிரதிநிதி அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளையை அணுக வேண்டும், மேலும் தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் குறித்து கஸ்டமருக்கு கிளை வழிகாட்டும். இந்த ஆவணங்களை கிளை பெற்றதும், அதை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாக, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிளைமைச் செயலாக்குவதற்காக வங்கி, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளும். இருப்பினும், கிளை ஆவணங்களைப் பெறுவதால் அது கிளைமை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தமாகாது. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால் கிளைம் செய்பவர் உடனடியாக அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளைக்கு தெரிவிக்க வேண்டும். பாலிசியின் படி, விபத்து நடந்த 30 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (வங்கி மூலம்) தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
|
6.5 | பொறுப்பு துறப்பு - காப்பீடு என்பது கோரிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு விஷயம், அதனால் எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்தவொரு இழப்பீடு அல்லது கிளைமைச் செயலாக்குவதற்கு HDFC வங்கி பொறுப்பாகாது
- இந்த கிளைம்கள், கொள்கை ஆவணத்தில் (பாலிசி டாக்குமெண்ட்) குறிப்பிடப்பட்டுள்ள விலக்குகளுக்கு உட்பட்டதாகும்
|
6.6 | ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஆக்சிடென்ட்டல் டெத் கவர் |
| - வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களால் (ரயில்/சாலை/விமானம்) நிகழும் மரணத்திற்கு காப்பீடு இழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
- இந்த இழப்பீடு சேவிங்ஸ்மேக்ஸ் அக்கவுண்ட்டின் முதல் ஹோல்டருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
- கிளைமை செயல்படுத்துவதற்கு, முதன்மை அக்கவுண்ட் ஹோல்டர், இறந்த தேதிக்கு முந்தைய 3 மாதங்களில் ஏதேனும் ஒரு வணிக நிறுவனத்தில், டெபிட் கார்டைப் பயன்படுத்தி, குறைந்தது 1 பர்ச்சேஸ் - பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பரிவர்த்தனையை செய்திருக்க வேண்டும். இறப்பு ஏற்பட்ட அதே மாதத்தில், அந்த தேதிக்கு முன்பு செய்யப்பட்ட பர்ச்சேஸ் பரிவர்த்தனையும் செல்லுபடியாகும்.
|
6.7 | பொறுப்பு துறப்பு |
| - அக்கவுண்ட் வைத்திருப்பவர் தற்செயலாக இறக்க நேரிட்டால், கிளைம் செய்பவர்/கிளைம் செய்பவரின் பிரதிநிதி கணக்கு/அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளையை அணுக வேண்டும், மேலும் தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் குறித்து கஸ்டமருக்கு கிளை வழிகாட்டும்
- இந்த ஆவணங்களை கிளை பெற்றதும், அதை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாக, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிளைமைச் செயலாக்குவதற்காக வங்கி, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்
- இருப்பினும், கிளை ஆவணங்களைப் பெறுவதால் அது கிளைமை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தமாகாது
- திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால்/மரணம் ஏற்பட்டால், கிளைம் செய்பவர் உடனடியாக அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளைக்கு தெரிவிக்க வேண்டும்
- கிளைம் செய்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இழப்பு ஏற்பட்ட தேதியிலிருந்து அறுபது (60) நாட்களுக்குள் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் இழப்பு ஏற்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கிளைம் செய்ய வேண்டும்
- இந்த கிளைம்கள், பாலிசி டாக்குமெண்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலக்குகளுக்கு உட்பட்டதாகும்
|
7 | பெண்களுக்கான சேமிப்பு கணக்கு பெண்களின் சேமிப்பு கணக்கு (விமன்'ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் கூடுதல் சலுகைகள்
விளக்கம் | காப்பீடு தொகை | பெர்சனல் ஆக்சிடென்ட்டல் டெத் கவர் | Rs 10,00,000/- ரூ. 10,00,000/- | தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் இழப்பீடு(இழப்பீட்டு காப்பீடு) | ஆண்டிற்கு ரூ. 1,00,000/-
| தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் (Accidental Hospital Cash)
| ஒரு ஆண்டிற்கு அதிகபட்சம் 10 நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ. 1,000/- |
தற்போது இந்த பாலிசி HDFC ERGO பொது காப்பீட்டில் உள்ளது. இழப்பீடானது பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சார்ந்து அமையும் :
|
7.1 | பெர்சனல் ஆக்சிடென்ட்டல் டெத் கவர் (Personal Accidental Death Cover ) - இந்த இழப்பீடானது பெண்களின் சேமிப்பு கணக்கின் முதல் ஹோல்டருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
- கிளைமை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்கு, பெண்களின் சேமிப்பு கணக்கின் முதல் ஹோல்டர், விபத்து நடந்த தேதிக்கு முந்தைய 6 மாதங்களில் ஏதேனும் ஒரு வணிக நிறுவனத்தில், டெபிட் கார்டைப் பயன்படுத்தி, குறைந்தது 1 பர்ச்சேஸ் - பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பரிவர்த்தனையை செய்திருக்க வேண்டும். அதே மாதத்தில் இறந்த தேதிக்கு முன்பு செய்யப்பட்ட பர்ச்சேஸ்
பரிவர்த்தனையும் செல்லுபடியாகும். |
7.2 | தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் காப்பீடு (Accidental Hospitalization Cover ) - இந்த இழப்பீடானது பெண்களின் சேமிப்பு கணக்கின் முதல் ஹோல்டருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
- இது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு இழப்பீட்டு காப்பீடு ஆகும்
- பாலிசி காலகட்டத்தில், பெண்களின் சேமிப்பு கணக்கின் முதல் ஹோல்டர் மருத்துவர் ஆலோசனையின் படி தற்செயலாக ஏற்பட்ட உடல் காயம் காரணமாக குறைந்த பட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனமானது நியாயமான மற்றும் வழக்கமான மருத்துவ செலவுகளுக்கு (அதிகபட்சமாக ரூ. 1,00,000/-) இழப்பீடு வழங்கும்.
- தங்கும் இடம், மருத்துவ பராமரிப்பு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஊழியர்களின் கவனிப்பு, மருத்துவ ரீதியாக தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் மருத்துவ நுகர்பொருட்கள் என மருத்துவரின் ஆலோசனையின் படி மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அனைத்து நியாயமான கட்டணங்களும் இதில் அடங்கும்.
- கிளைமை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்கு, பெண்களின் சேமிப்பு கணக்கின் முதல் ஹோல்டர், விபத்து நடந்த தேதிக்கு முந்தைய 6 மாதங்களில் ஏதேனும் ஒரு வணிக நிறுவனத்தில், டெபிட் கார்டைப் பயன்படுத்தி, குறைந்தது 1 பர்ச்சேஸ் - பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பரிவர்த்தனையை செய்திருக்க வேண்டும். விபத்து நடந்த அதே மாதத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அந்த தேதிக்கு முன்பு செய்யப்பட்ட பர்ச்சேஸ் பரிவர்த்தனையும் செல்லுபடியாகும்.
- தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய காப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும். இது காப்பீட்டு நிறுவனத்துடன் வங்கியில் நீங்கள் தொடங்கி இருக்கும் பாலிசி காலத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1,00,000/- தீரும் வரை செயல்படுத்தப்படும். மேலும், இதனை நீங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
- 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால் மட்டுமே விபத்துக்கான காப்பீடு வழங்கப்படும்
- இந்த காப்பீடு இங்கு வசிக்கும் தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர் அல்லாத நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
- இந்த பாலிசியின் வயது வரம்பு 18 ஆண்டுகள் முதல் 70 ஆண்டுகள் வரையாகும்.
|
7.3 | விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் பணம் (Accidental Hospital Cash )
- இந்த பாலிசியின் மூலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து நிறைவடைந்த ஒவ்வொரு நாளுக்கும் பண சலுகைகள் வழங்கப்படுகிறது மற்றும் 24 மணி நேரத்திற்கும் மேலாக விபத்து காரணமாக கஸ்டமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர் அதனை கிளைம் செய்து கொள்ளலாம். இது பில்கள் இல்லாமல் ஏற்படக்கூடிய செலவுகளை ஈடு செய்ய உதவும்.
- ஒரு நபருக்கு, ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வீதம், நாள் ஒன்றுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படுகிறது, இதில் ‘நாள்’ என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து கணக்கிடப்படும் ஒவ்வொரு 24 மணிநேரமும் நிறைவடைவதாகும்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் கீழ் கிளைம் செய்தது ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்சத்தில் மட்டுமே, காப்பீட்டு நிறுவனத்துடன் வங்கியில் நீங்கள் கொண்டிருக்கும் ஒரு பாலிசி காலத்தின் கீழ் 10 நாட்கள் முடியும் வரை தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது வழங்கப்படும் பணம் காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்படும்
- பணச் சலுகையை (cash benefit) அதிகபட்சமாக வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பெற வேண்டும்
|
7.4 | கிளைம் செய்வதற்கான செயல்முறை:
- அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தற்செயலாக மருத்துவமனையில் இருந்தால்/இறப்பு ஏற்பட்டால், கிளைம் செய்பவர்/கிளைம் செய்பவரின் பிரதிநிதி அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளையை அணுக வேண்டும், மேலும் தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் குறித்து கஸ்டமருக்கு கிளை வழிகாட்டும்
- பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், பெண்களின்சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆவணங்ககளை கிளை பெற்றதும், கிளைய்மைச் செயலாக்குவதற்காக வங்கி, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்
- இருப்பினும், கிளை ஆவணங்களைப் பெறுவதால் அது கிளைய்மை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தமாகாது.
- திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால்/மரணம் ஏற்பட்டால், கிளைம் செய்பவர் உடனடியாக அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளைக்கு தெரிவிக்க வேண்டும்
- பாலிசியின்படி, விபத்து நடந்த 30 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (வங்கி மூலம்) தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்
|
7.5 | பொறுப்பு துறப்பு - காப்பீடு என்பது கோரிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு விஷயம், அதனால் எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்தவொரு இழப்பீடு அல்லது கிளைமைச் செயலாக்குவதற்கு HDFC வங்கி பொறுப்பாகாது
- இந்த கிளைம்கள், கொள்கை ஆவணத்தில் (பாலிசி டாக்குமெண்ட்) குறிப்பிடப்பட்டுள்ள விலக்குகளுக்கு உட்பட்டதாகும்.
- ஆவணங்களை கிளை பெற்றுக் கொள்வதன் மூலம், அது கிளைம்களை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தமாகாது.
|